ஒரு வார கால தடைக்கு பின் குற்றால அருவிகளில் இன்று குளிக்க ( kutralam falls ) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயங்கள் உள்ளது.
இதில் குற்றால அருவிகளில் கனமழையின் காரணமாக திடீர் தீடீரென வெள்ளம் வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு வார கால தடைக்கு பின் குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்து நீர்வரத்து சாதுவாக இருப்பதால் இன்று சுற்றுலா பயணிகள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் தடை விதிக்கப்பட்டது.
மெயின் அருவியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அங்கு ( kutralam falls ) குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது .