மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! _ போராட்டத்தை கைவிடுவார்களா விவசாயிகள்?

agricultural laws to be withdrawn pm modis announcement

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்ள் இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகள் திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஹரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.  தொடர்ந்து 12 மாதங்களாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

agricultural-laws-to-be-withdrawn-pm - modis-announcement
agricultural laws to be withdrawn pm modis announcement

இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்ள் இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடி வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts