தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகளில் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 2வது முறையாக தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் விவசாயிகளில் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ 300 கோடியில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ₹65.34 கோடி ஒதுக்கீடு, டெல்டா பகுதிகளில் பாசன கால்வாய்களை தூர்வார ₹80 கோடி நிதி ஒதுக்கீடு., வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ₹16 கோடி நிதி ஒதுக்கீடு,இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ₹400 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டிட்ட பல அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டுள்ளது.