இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை (AIADMK candidate list) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பின் படி இன்று துவங்கும் வேட்புமனு தாக்கலானது அடுத்த வாரம் 27 ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றன .
அந்த வகையில், திமுக , அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இன்று தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டியில் உள்ள அதிமுக கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.
16 தொகுதிகளுக்கான (AIADMK candidate list) அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் :
சென்னை வடக்கும்: இராயபுரம் மனோகர்
சென்னை தெற்கு: டாக்டர் ஜெ.ஜெயவர்தன்
காஞ்சிபுரம்: ராஜசேகர்
அரக்கோணம்: ஏ.என் விஜயன்
கிருஷ்ணகிரி: ஜெயபிரகாஷ்
ஆரணி: கஜேந்திரன்
விழுப்புரம்: பாக்கியராஜ்
சேலம்: விக்னேஷ்
நாமக்கல்: தமிழ்மணி
ஈரோடு: ஆற்றல் அசோக் குமார்
கரூர்: தங்கவேல்
சிதம்பரம்: சந்திரஹாசன்
நாகை: சுர்ஜித் சங்கர்
மதுரை: டாக்டர் சரவணன்
தேனி: நாராயணசாமி
ராமநாதபுரம்: ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.