இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சுயேட்சை வேட்பாளர் (OPS) ஓ.பன்னீர்செல்வம் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தேர்தல் விதிமுறைகளை மீறி 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் பன்னீர்செல்வம் தலைமையில் அத்துமீறி காவல்துறை தடுப்புகளை உடைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
இது தொடர்பாக அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரே தொகுதியில் 6 பன்னீர்செல்வம் இருப்பதால் முன்னாள் முதல்வர் (OPS) ஓ.பன்னீர்செல்வம் கடும் மனஉளைச்சலில் இருக்கும் நிலையில் தற்போது இப்படி ஒரு புதிய பிரச்னை வந்துள்ளது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.