ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்வுக்கு ஏர்லைன் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற QF59 விமானத்தின் இருக்கைகளில் உள்ள திரைகளில் திடீரென ஆபாசப் படம் ஒளிபரப்பாகி உள்ளது . இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் ஆபாச படத்தை கண்டதும் முகம் சுழித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Also Read : அமைச்சரவை மாற்றத்திற்கு பின் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..!!
விமானத்தில் 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதை Off செய்யவோ, Pause செய்யவோ முடியவில்லை என பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர் . இதையடுத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தரப்பில் விளக்கமும் மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது.
விமானத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் விமான நிறுவனம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்தும் வகையில் வைக்க வேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோபம் கலந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.