ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் செல்போன் கட்டணத்தை 10% முதல் 20% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ரூபாய் 179 ஆக இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூபாய் 199 ஆக உயர்வு.
தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.265-லிருந்து ரூ.299 ஆக உயர்வு.
இந்த கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் சேவைகளுக்கான 10-வது அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் உயர்த்தியுள்ளன. வரும் நாட்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.