நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் இணைய போவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் தனுஷை பிரியப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது இவர்கள் இரண்டு பேருக்கமான விவாகரத்துக்கு காரணம் என்ன என்று பல கேள்விகளும் எழுப்பப்பட்டது.
ஆனால்,இருவரும் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.இருப்பினும் 18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த இவர்களது திருமணவாழ்க்கை முறிந்து விடக் கூடாது என தனுஷ் ரசிகர்களும் ஐஸ்வர்யாவின் ரசிகர்களும் பல கமெண்ட்களை கூறி வந்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவும் தனுஷும் சமீபத்தில் இவர்களுடைய மகனின் பள்ளி விழாவில் கலந்து கொண்டனர்.இந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷேர் செய்திருந்தார்.இதனால் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் சேர்ந்து வாழ போவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் தற்போது ரஜினி அவர்களின் வீட்டில் ஒன்றாக சந்திதாக கூறப்படுகிறது.இதன் மூலம் இவர்கள் விவாகரத்து முடிவை கைவிட்டியிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.