தன்னை கட்டாயப்படுத்தி தான் காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் அஜித்தின் கெரியரில் மறக்க முடியாத படங்களுள் ஒன்றான காதல் மன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை சரண் இயக்கி இருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
காதல் மன்னன் படத்தில் அஜித்துடன் நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கரண், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கும் ஹீரோயின் மானுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த திரைப்படம் மூலமாக தான் நடிகை மானு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
ஆனால் காதல் மன்னன் படத்தோடு அவர் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், தற்போது காதல் மன்னன் பட நடிகை மானு பேட்டி ஒன்றில் பேசியுள்ளதாவது..
“காதல் மன்னன் படத்தில் என்னை வற்புறுத்தி தான் ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள். எனது குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்ததில்லை. என் குடும்பத்தினர் பெரும்பாலானோர் டாக்டர்கள் தான். என்னுடைய தாத்தா கோபிநாத் பர்டோலால், அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நான் படிப்பதற்காக தான் சென்னைக்கு வந்தேன்.
ஸ்கூல் படிக்கும்போதே விவேக்கும், சரணும் என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினேன். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டேன். என் கணவரும் டாக்டராக தான் உள்ளார்” எனக் கூறியுள்ளார்.