மகிழ் திருமேனி இயக்கதில் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வரும் அஜித்துக்கு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் வில்லனாக நடிக்க (ajithkumar play villain) வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில். அதற்கடுத்ததாக ஏகே 62 படத்தில் நடிக்க தற்போது வெறித்தனமாக நடிகர் அஜித் தயாராகி வருகிறார். இந்நிலையில், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்தை சங்கர் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான ஆர்.சி.15 படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாகவும் கோலிவுட்டில் காட்டுத்தீ போல ஒரு தகவல் பரவி வருகிறது.
இப்படத்தில், ராம்சரண் நாயகனாக நடிக்கும் நிலையில், எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும், தற்போது அஜித்தை அந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்க அணுகியுள்ளார்கள் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.
அந்த வகையில், ஆர்.சி.15 படத்தில், அஜித்தை செம்ம மாஸான வில்லனாக நடிக்க (ajithkumar play villain) வைக்க சங்கர் திட்டமிட்டு இருப்பதாகவும், விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல அஜித்திற்கும் பவர்ஃபுல்லான ஒரு ரோலை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால், இதற்கு அஜித் ஓகே சொல்வாரா? என்பது தான் சந்தேகம். ஏனென்றால், தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் வில்லனாக நடித்த சம்மதிப்பது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
அனால், வாலி, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடிகர் அஜித் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருந்தது போல, இதிலும் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசிக் கொள்ளபடுகிறது.
இந்நிலையில், சங்கரின் அழைப்பை ஏற்று ஆர்.சி.15ல் நடிக்க ஓகே சொல்வாரா ஏகே என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.