இந்திய மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு தான் நேரடியாக செல்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது :
இந்திய மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு தான் நேரடியாக செல்கிறது அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி துணையாக இருக்கிறார்.
அதானி நடத்தும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பாக முறைகேடு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் கூட, அவருக்கு எதிராக எந்த ஒரு விசாரணைக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்திரவிடுவதில்லை.
இந்திய அரசு அதானிக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? அதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி யார்? என்பதை இந்திய நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாளுக்கு நாள் பிரதமர் நரேந்திர மோடி நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்
இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக ரூ.32,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது
இந்தோனேசியாவில் அதானி குழுமம் வாங்கும் நிலக்கரியின் விலை நடுக்கடலில் 2 மடங்காக உயர்வது எப்படி? நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.