ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாவட்டத்தில் குருகிராம் அடுத்துள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ”பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இந்த யாத்திரையை பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கேத்லா மோட் அருகே யாத்திரை சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் கும்பல் ஒன்று வழி மறைத்து இந்த பகுதியில் யாத்திரை தொடர மறுப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையில் மோதல் உருவானது.
ஒரு கட்டத்தில் கலவரமாக மாறிய இந்த சம்பவத்தில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. மேலும் வன்முறையில் புது தில்லியின் புறநகர்ப் பகுதியான சோஹ்னா பைபாஸில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீவைக்கப்பட்டன.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை ஒடுக்க முயற்சித்தனர்.
திடீரென வன்முறையாளர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கினர்.அதில் ஹோம் கார்டு ஐவான் ஒருவர் உயிரிழந்தார். டி.எஸ்.பிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
மேலும் பல போலீசார் காயமடைந்துள்ளனர். நூஹ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது;