முதலை போன்ற தலையும், கூர்மையான பற்களையும் கொண்ட ஒரு வகை இன மீன் இனமான அலிகேட்டர் (alligator) மீன் சமீபத்தில் போபால் குளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை அலிகேட்டர் (alligator) மீன் சமீபத்தில் போபாலில் உள்ள ஒரு குளத்தில் இருப்பதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் அடைந்து உள்ளனர்.
பொதுவாக, இந்த வகை மீன்கள் குளத்தில் இருந்தால், சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நிபுணர்கள் இதுக்குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி போபாலில் உள்ள குளம் ஒன்றில் அலிகேட்டர் இன மீன்கள் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வந்ததது. இந்த வீடியோவைப் பார்த்த அனஸ் என்ற நபர், அதில் இருப்பது ஒரு குட்டி முதலை என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பார்ப்பதற்கு முதலை போன்ற முகமும், கூர்மையான பற்களையும் கொண்டுள்ள அலிகேட்டர் கார்ஃபிஷ் என்ற இந்த வகை மீன்கள், வட அமெரிக்காவில் அதிகளவில் காணப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
போபாலில் உள்ள குளத்திற்கு இந்த வகை மீன்கள் எப்படி வந்தது என்பது குறித்து வனத்துறை நிர்வாகம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த குளத்தில் அலிகேட்டர் மீன்கள் அதிக அளவில் உள்ளனவா? என்பது குறித்தும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
வல்லுனர்களின் கூற்றுப்படி, பொதுவாக இந்த வகை அலிகேட்டர் மீன்களின் ஆயுட்காலம் 18-20 ஆண்டுகள் இருக்கக்கூடும் எனவும், இந்த வகை மீன்கள் பொதுவாக 12 அடி நீளம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.