MiC : நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு,
மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.
இதையும் படிங்க : திமுக தேர்தல் பரப்புரை கூட்டம் – திருச்சி வந்த வைகோ – செய்தியாளர் பேட்டி..!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாகவே தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.
அதன்படி, நாதக அனுப்பிய சின்னங்களில் ‘மைக்’ MiC சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார்.