அமெரிக்காவில், விமானம் (airlines) நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினில் இருந்து தீ கொளுந்துவிட்டு எரிந்தத வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகரை நோக்கி அமெரிக்க ஏர்லைன்ஸ் (airlines) பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில், ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் விமானத்தின் என்ஜினில் தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தானது நடுவானில் விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியதால் என்ஜினில் தீ பற்றியுள்ளது.
இதனால், என்ஜினில் தீ பற்றியதால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்ததை அடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒஹியோ விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார்.
அதன் பின்னர், உடனடியாக என்ஜினில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து மாற்று விமானம் மூலமாக பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடுவானில் இந்த தீ விபத்து விமான ஏற்பட்ட நிகழ்வை தரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.