உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண் 130 நாட்கள் எவ்வித பிரச்சினையுமின்றி வாழ்ந்துள்தாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை ஆட்டி வைக்கும் செல்வாக்கு மிகுந்த நாடாக விளங்கும் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருப்பதால், சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட 4 பேர், 2 மாதங்கள் மட்டுமே நன்றாக இருந்த நிலையில், முதல்முறையாக டொவானா லூனி என்ற 53 வயது பெண் 4 மாதங்களுக்கு மேல் எவ்வித பிரச்சினையுமின்றி இருந்து வந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் தற்போது அவருக்கு சற்று ஒவ்வாமை ஏற்பட்டதால் பன்றியின் சிறுநீரகம் அகற்றப்பட்டு மீண்டும் டயாலிசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த ஆராச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.