இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர் ஒட்டபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழுகட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் , ஆறு கட்ட வாக்கு பதிவு நிறைவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை இன்று ( மே 30-ஆம்) தேதியுடன் ஓய்கிறது.
இதனை தொடர்ந்து வருகிற 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி உலகமே எதிர்பார்க்கும் அடுத்த இந்தியாவின் பிரதமர் யார் என்கிற முடிவு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார் .அங்கு உள்ள வினேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க: ”பிரதமர் வருகை ..”போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட கன்னியாகுமரி!
இதற்காக, டெல்லியில் இருந்து இன்று (30-ஆம் தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார்.
பின்னர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், 31-ஆம் தேதி காலை தியானத்தை தொடங்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து வரும் 1ம் தேதி வரை கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் அவர் தங்கி இருக்கிறார்.
1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவு மண்ட பாறையில் இருந்து வெளியே வரும் அவர் படகு மூலம் கரை திரும்புகிறார்.
அன்னைய தினம் பிற்பகல் மீண்டும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்வதாக அவருடைய பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் தியான நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புடன் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமரின் வருகைக்கு திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டர் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் இரவோடு இரவாக #GoBackModi என்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
அந்த போஸ்டரில் “ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா?” என போஸ்டருக்கு தலைப்பிட்டு Hello Netizens… Ready Start 1 2 3 #GoBackModi என Twitter Trending-க்கு அழைப்புவிடும் வகையிலும்,
இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே…! என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்ட்டரை சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.