கிளாம்பாக்கம் (kilampakkam bus station ) பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை, கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் (kilampakkam bus station) பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்ககளை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : spain : மேட்ரிட் நகரில் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90% அடிப்படை வசதியை செய்துள்ளோம் என்றும் தெரிவித்த அவர், வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.
https://x.com/ITamilTVNews/status/1753746149947953614?s=20
ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டி வரும் புதிய பேருந்து நிறுத்தம் இடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார்.