spain: ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05.02.2024) மீண்டும் ஆலோசனை மேற்கொள்கிறார் .
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வருக்கு ஸ்பெயில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறன. அதன்படி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளன.
அந்த வகையில் ஸ்பெயின் (spain) நாட்டின் மேட்ரிட் நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர்களுடன் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அம்போ வால்வ்ஸ், இங்கிடீம், கோர்லான் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
இதையும் படிங்க : 8ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் Black Shirt.. TR.பாலு ஆர்டர்
இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே.விஷ்ணு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : Himachal car accident-இமாச்சலில்..சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயம்..!
இதனையடுத்து தனது ஸ்பெயின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
இதற்கிடையே ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார்.
https://x.com/ITamilTVNews/status/1754100660965187886?s=20
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி தொடங்கிய ஆலோசனை இன்றுடன் நிறைவு பெறுகிறது.