BJP-PMK alliance :வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப் படவிருக்கும் நிலையில் ஆளுங்கட்சியான திமுக தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும்,
விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கி விட்டு தனது கூட்டணிக் கதவுகளை சாத்தி விட்டது.
இந்த தேர்தலில் திமுக 21 இடங்களில் போட்டியிட இருக்கும் நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இன்னும் இறுதி செய்யவில்லை.
இதையும் படிங்க : 2024 March 11 : இன்றைய ராசி பலன்!!
முக்கியமாக தேமுதிக, பாமக ஆகிய இரு கட்சிகளும் வட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கோடு இருக்கும் நிலையில், அந்த இரு கட்சிகளுமே அதிமுக – பாஜக என 2 முக்கிய கட்சிகளோடும் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தன.
இதில், தேமுதிக தனது கூட்டணியை அதிமுகவோடு வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதுவும் இன்னும் உறுதி செய்யப்படாமலே உள்ளது.
அதே போல, பாமகவை பொறுத்தவரை, அதை தனது கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக ரொம்பவே முயற்சி செய்தது.
இதற்காக, முன்னால் அதிமுக அமைச்சரும், சிட்டிங் ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகம் பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்து இரு முறை பேச்சு நடத்தினார்.
அப்போது, தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி என 7 தொகுதிகளை ஒதுக்குமாறும் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் கசிந்தன.
ஆனால், சீட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்த வரை அதிமுகவில் பிரச்சனை இல்லையென்றாலும், அதனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிகவின் லிஸ்ட்டிலும்,
பாமக கேட்ட பல தொகுதிகள் இடம் பெற்றிருந்ததாலும், ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுக உறுதி அளிக்காததாலும், கூட்டணி குறித்த முடிவு எடுப்பதில் இழுபறியே நீடித்தது.
அதே போல, ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருந்தாலும், அன்புமணியின் முடிவோ பாஜகவோடு கூட்டணி என்பதாகவே இருந்த்து.
இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டினார்களே? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்1
இந்நிலையில்தான், பாஜக வுடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக பாஜகவின் மேல் மட்ட தலைவர்களை நேரில் சந்தித்து,
கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த அன்புமணி ராமதாஸ் இன்று (11.03.2024) டெல்லி செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக, இன்று இரவு அல்லது நாளைக்குள் பாஜக – பாமக BJP-PMK alliance கூட்டணி உறுதியாகும் என்றே கூறுகின்றனர் தைலாபுரத்திற்கு நெருக்கமானவர்கள்.