தமிழ் நாடு அரசின் தொல்லியல்துறை மூலம் நடைபெற்று வரும் சென்னானூர் அகழாய்வில் கற்கால கருவி ஒன்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் சென்னானூர் அகழாய்வில் தற்போது உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இக்கருவி 53 செ.மீ ஆழத்தில், நீளம் 6 செ.மீ மற்றும் அகலம் 4 செ.மீ கொண்டு காணப்படுகிறது.
இதேபோல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் 30.7 மி. மீ உயரமும் 25.6 மி. மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.