ஆந்திர மாநிலத்தில் கவுன்சிலர் ஒருவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விரக்தியில் தன்னைத்தானே செருப்பால் அறைந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், நர்சிப்பட்டணம் அனகப்பள்ளி மாவட்டம், நகராட்சியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முலபர்த்தி ராமராஜு என்பவர் கவுன்சிலராக உள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலின் போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான ரோடு, சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தோல்வியடைந்தார்.
இந்நிலையில், நேற்று நர்சிப்பட்டணம் பேரூராட்சியில் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராமராஜூ உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளின் நிதி வழங்காததால் நரசிப்பட்டினம் நகராட்சியில் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் கூறினார்.
மேலும்“நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 31 மாதங்களாகியும், எனது வார்டில் வடிகால், மின்சாரம், சுகாதாரம், சாலைகள் மற்றும் பிற பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.
இதனால் ராமராஜு தனது தொகுதிக்கு வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விரக்தியில் கவுன்சிலர் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.