மீனாட்சியம்மன் கோவிலில் அமைச்சராக (Andhra Tourism Minister) சாமி தரிசனம் செய்துள்ளேன், இன்னும் எனர்ஜியுடன் புது சக்தியுடன் ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்கிறேன் மதுரையில் நடிகை ரோஜா பேட்டி.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும் (Andhra Tourism Minister) நடிகையுமான திருமதி ரோஜா இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மன் சுவாமி சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கோவிலுக்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரோஜா..
மதுரை மீனாட்சி அம்மன் ஆசிர்வாதத்துடன் இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளேன், 2013ஆம் ஆண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றேன் அதற்கு அமைச்சராகிய பின் தற்போது வந்துள்ளேன்.
மீனாட்சி அம்மனிடம் பூஜை செய்துவிட்டு ஆசீர்வாதம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இன்னும் எனர்ஜியுடன் புது சக்தியுடன் ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்கிறேன்
கர்நாடகா காங்கிரஸ் வெற்றி பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார்.