ஆந்திராவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி உள்பட பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் தண்டவாளத்தின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது.
ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியுள்ளது .
இந்த கோர விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர் . இந்த விபத்தில் இதுவரை 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . மேலும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
இந்நிலையில் இந்த கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் : ஆந்திராவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் : ஆந்திர மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்குதெரிவித்துக்கொள்கிறேன் . அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவது மனதிற்கு மிகுந்த கவலை அளிக்கிறது ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.