ஆந்திரா ரயில் விபத்து : மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு..!!

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் , காயமடைந்தவர்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் தண்டவாளத்தின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியுள்ளது .

இந்த கோர விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர் . இந்த விபத்தில் இதுவரை 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . மேலும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அளித்த உத்தரவின் பேரில் ஆந்திர மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் இந்த கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லடசம் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பிரதமர் திட்டத்தின் மூலம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும், உயிரழிந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts