dmk files-3திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழ்நாடு மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம் எஸ் ஜாபர் சைட் இடையேயான உரையாடல் பதிவை ‘திமுக ஃபைல்ஸ் பகுதி 2’ வீடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு 2023 ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் DMK FILES-1 DMK FILES-2 கோப்புகள் வெளியிடப்பட்டு, அதுதொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,
dmk files-3 தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் ,DMKFiles3- தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற வீடியோ பதிவை, அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.
Also Read :https://itamiltv.com/seeman-condemned-the-bjp-party/
அதில், தி.மு.க., – எம்.பி., – டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மீனவர்கள் பிரச்னையில் 2ஜி பிரச்னையை மறைக்க நினைத்தார்.
இது குறித்து, கருணாநிதி சார்பில், ஜாபர் சேட், அப்போதைய மத்திய அமைச்சரவை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு பேசியதாக தெரிகிறது.
2004-14 க்கு இடையில் வேறு பெயர் வைத்திருந்த ஐ.என்.டி.ஐ. கூட்டணியின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல டேப்களில் இதுவும் ஒன்று. #DMKFiles3″ என்று அண்ணாமலையின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read :https://x.com/annamalai_k/status/1746511037984382976?s=20
இது குறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘இண்டியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல நாடாக்களில் இதுவும் ஒன்று.
இந்த கூட்டணி 2004ம் ஆண்டு முதல் 20014ம் ஆண்டு வரை வேறு பெயரை கொண்டிருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சி.பி.ஐ.,
ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க., காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டனர்.
வரும் நாட்களில் இது தொடர்பாக, மேலும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படும் என்று Dmk Files-3 இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.