ட்ரோல் வீடியோக்கெல்லாம் கைது நடவடிக்கை என்றால் முதலில் திமுக ஐடி வீங்கை தான் முதலில் கைது செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடப்பு நிதியாண்டின் தமிழக நிதிநிலையை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் வகையில் வாய்சா ஆப் சவுக்கு சங்கர் என்ற டிவிட்டர் பக்கம் இயங்கி வருகிறது. இந்த பக்கத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் அவரின் காணொளி பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
அந்த பதிவு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து அவமரியாதை,பெண்கள் மரியாதை குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவினை கீழ் வழக்கு பதிவு செய்து வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் அட்மின் பிரதீப் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யபட்டார்.
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ் நாட்டின் நிதி அமைச்சர் தியாகராஜன் காரணம் என தெரிவிக்க, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜானும் பதிலடி கொடுக்க, டிவிட்டரில் இருவருக்கும் கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
அதிகாரங்கள் ஒரு குடும்பத்திற்குள் நுழைந்தால் ஜனநாயகம் தன்னிச்சையாக மாறி எந்த நேரத்திலும் சர்வாதிகார அரசாக மாறும். சிறிதளவு விமர்சனத்திற்கே திமுக அரசு திகைத்து நிற்கிறது.
சமூக வலைத்தள பதிவிற்காக ஒரு நபரைக் கைது செய்வதன் மூலம் தனது சர்வாதிகார நடத்தையை வெளிப்படுத்தியுள்ளது. ட்ரோல் வீடியோவை வெளியிடுவது கைது செய்யப்படும் அளவிற்குத் குற்றம் என நினைத்தால்,
தமிழ் நாட்டில் ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் சிறையில் இருக்க வேண்டும். ஏனெனில் ட்ரோல் வீடியோ தான் அவர்களின் முழு நேரத் தொழில்.
குற்றம் ஏதேனும் இருந்தால் அதற்குத் தகுதி அற்றது தெரிந்தும் தமிழக காவல்துறையினர் திமுகவின் விருப்பபடி வாய்சாப் சவுக்கு பக்கத்தின் அட்மினை கைது செய்திருப்பது,
கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது நள்ளிரவு கைதுகள், சாதனைகள் ஏதும் இல்லாத சுய விளம்பரங்கள் இவை ஒரு பாசிச வாதியின் குணாதிசயங்கள் கொண்ட ஸ்டாலின். என திமுக அரசியல் மு க ஸ்டாலினையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.