பிரதமர் மோடி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம்:
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான கலாச்சார தொடர்பை புதுப்பிக்கவும் கொண்டாடவும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடத்தட்டப்பட்டு வருகிறது.அந்த வகையில்,காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை நமோகட்டில் பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் கொடியசைத்து தொடங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி பேசினார்.
அப்போது பேசிய அவர்,“தனது பேச்சின் நிகழ்நேர தமிழாக்கம் வேண்டுமானால், பார்வையாளர்களை இயர்போனைப் போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு மூலம் இங்கு தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கமாகும், மேலும் நான் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது” என தெரிவித்தார்.
இந்த நிலையில்,பிரதமர் மோடி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களால் நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பலனடைவதே, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமையாகும். நமது பிரதமர் காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் பேசும்போது, தமது உரையின் நேரடி மொழிபெயர்ப்பை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முயற்சித்தார்.
நமது பிரதமரின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் கேட்கும் வாய்ப்பு, எனக்கும், நமது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ் மாணவர்களுக்கும் கிடைத்தது ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது.
பாரதப் பிரதமர் ,முதன்முறையாக இந்த செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்.
இந்த தொழில்நுட்பம், மொழி வேறுபாட்டினை நீக்கி, தேச நலனுக்கான நமது பிரதமரின் தொலை நோக்குப்பார்வையின் பலன்கள், தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் அடைவதை உறுதி செய்யும் என அவர் கூறியுள்ளார்.