மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் (ReExams) எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் . தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் என்று பள்ளி மற்றும் கல்லூரி நிறுவங்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்திருந்தனர் .
இதையடுத்து நேற்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது .
இதையடுத்து இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள், (ReExams) ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என பதிவாளர் சங்கரவேலு அறிவித்துள்ளார்.
நேற்று கனமழை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை வரும் 10ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வரும் 10ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Also Read : https://itamiltv.com/special-necklace-has-created-to-offer-the-lord-in-ayodhya-ram-temple/
இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் படகு, மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மிக்ஜாம் புயல் வந்து பல மாவட்டங்களை புரட்டி போட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை பொது மக்களுக்கு கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.