எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
நான் விடிய விடிய படிச்சது, விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும், விடிய விடிய எங்க அப்பாவோட
மம்பட்டி புடிச்ச கை இன்னும் காப்பு காச்சுருக்கு. என்னிடம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும். கேள்விகளுக்கு No Comments, Sorry என கூறி எனக்கு தவிர்க்க தெரியும் ஆனால், அது மக்களை ஏமாற்றுகிற வேலை.
உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கு, எனக்கு 3 வருச அனுபவம்தான் இருக்குனு சொல்றதுக்கு நான் வரல, அது உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளிக்கட்சியாக இருந்தாலும் சரி. என் பாணி மாறாது.
Also Read : மருத்துவ கனவை எட்டிப்பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்..!!
எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது . உள்கட்சி ஆட்களோ, வெளிக் கட்சி ஆட்களோ நீங்கள் என்னையும் என் நேர்மையும் பற்றி பேசினால் நான் இப்படி தான் திருப்பி அடிப்பேன்.
அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசியலை உற்று நோக்குவேன் நான் வெளிநாட்டுக்கு சென்றாலும் இதயம் இங்குதான் இருக்கும்.
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி அறிக்கையும், சண்டையும் தொடர்ந்து இருக்கும் . ஆளுங்கட்சிக்கு எதிரான சண்டை இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.