பாஜக தலைமை நிச்சயமாக அண்ணாமலையை தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற்றுவார்கள்; அதற்குத்தான் அண்ணாமலை லண்டனுக்கு படிக்க செல்வதாகக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜகவின் அரசியல் உறவு முறிந்துள்ள நிலையில் இரு கட்சியை சார்ந்தவர்களும் மாறி மாறி தலைமை பொறுப்பில் இருப்பவர்களை குறை கூறி வருகினறனர் அதில் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை குறைகூற இந்த பக்கம் அதிமுகவினர் ஒன்று கூடி அண்ணாமலை மீது காரசார கருத்துக்களால் வாய் போர் நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை நேரடியாக பொது மேடையில் சொல்ல முடியாத காரணத்தால், நடிகர் ரஜினிகாந்தை வைத்து சீனியர்களை வெளியேற்ற பிள்ளையார் சுழியை போட்டுள்ளார்
Also Read : ரஷியாவில் உள்ள கட்டடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்..!!
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது, தான்தோன்றித்தனமாக பேசுவதால் தலைமை பொறுப்பு தமக்கு இருக்காது, இருக்கும் வரையில் ஏதாவது கருத்துகளை சொல்லிவிட்டு செல்லலாம் என பேசுகிறார்
பாஜக தலைமை நிச்சயமாக அண்ணாமலையை தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற்றுவார்கள் அதற்குத்தான் அண்ணாமலை லண்டனுக்கு படிக்க செல்வதாகக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அரசியல் பின்புலம் இல்லாதவர். தன்னுடைய உழைப்பால் 52 ஆண்டுகள் இந்த கட்சிக்காக தன்னை அர்ப்பணித்து, கொள்கையில் இருந்து பிறழாமல் இருந்ததால் தான் ஒரு இயக்கத்தில் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார்
எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைப் போல் யாருடைய சிபாரிசின் பேரிலும் தலைவர் ஆகவில்லை; அண்ணாமலைக்கும் இபிஎஸ்க்கும் இடையே உள்ள வரலாறு மலைக்கும் மடுவுக்குமான ஒப்பீட்டை போன்றது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.