முதலமைச்சரின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார் .
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதாகவும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். வெளிநாட்டு பயண விவகாரத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
Also Read : கல்லூரி மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் கைது..!!
ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதும் மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறில்லை.
மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதை பார்த்தேன். ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. அன்னபூர்ணா உரிமையாளரின் பேச்சு எதார்த்தமாக உள்ளது. அதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூதாகரமாக மாற்றியுள்ளன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.