April 23 Gold Rate : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ 53,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
இதையும் படிங்க : ரஜினிகாந்தின் புதிய படம் கூலி – டீசரில் தலைப்பைச் சொன்ன சூப்பர் ஸ்டார்
நேற்று (22.04.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,845-க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ஒரு கிராம் ரூ.6,700 -க்கும், சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (22.04.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ஒரு கிராம் ரூ.5,607-க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.44,856-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.119 குறைந்து ஒரு கிராம் ரூ.5,488க்கும், சவரனுக்கு ரூ.952 குறைந்து ஒரு சவரன் ரூ.43,904க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.2.50 குறைந்து ஒரு கிராம் ரூ.86.50க்கும் ஒரு கிலோ ரூ.86,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது (April 23 Gold Rate)
இதையும் படிங்க : செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!