School Student | அரியலூரில் 30 அடி ஆழ கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம்,உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சந்தோஷ் நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.
அப்போது நண்பர்களுடன் அருகில் உள்ள வளவெட்டி குப்பத்தில் விவசாய நிலத்திற்கு புறா பிடிக்க சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING | முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!
அதை தொடர்ந்து, புறா பிடிக்கும் ஆர்வத்தில் சந்தோஷ் கிணற்றை கவனிக்காமல் அருகில் உள்ள 30 அடி தண்ணீர் இல்லாமல் வறண்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
விழுந்ததில் சந்தோஷ் கை,கால் பலத்த காயம் அடைந்துள்ளது,அருகில் இருந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிங்க: சற்று நேரத்தில் வெளியாகிறது பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!
உடனடியாக விரைந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரி ராஜா தலைமையிலான வீரர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 அடி ஆழ கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.