ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனின் பெயரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
நடப்பாண்டில்,தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலையாக பார்க்கப்படும் இந்த கொலை வழக்கில் இதுவரை 22 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
Also Read : பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் – ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா..!!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார் .
இதையடுத்து அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக தற்போது அவரது தந்தையும் பிரபல ரவுடியுமான நாகேந்திரனின் பெயரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்க உள்ளனர்.