சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அதோடு காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டதால் தீஸ்தா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளபெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கிமில் வெள்ளப்பெருக்கால் NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது