சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன் நடக்கிறது. இதில் இந்திய வீர வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி, பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்த போட்டிகளில் இந்தியா இது வரை 100 பதக்கங்களை வென்றுள்ளது அதன் இந்தியா இதுவரை 26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று, சாதனை படைத்து இந்திய பாரா விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நமது வீரர்கள் 100 பதக்கங்கள் வென்றுள்ளனர். இது இணையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு மற்றும் மன உறுதி ஆகியவையே காரணம். ” எனக் கூறி இருக்கிறார்.
மேலும், “இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நம் இதயங்களை மகத்தான பெருமையால் நிரப்புகிறது. நமது விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவு படுத்துவதாக அவை அமைகின்றன” என பாராட்டி உள்ளார