பூமியை ஒரு சிறிய கோள் தாக்க உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்த நிலையில் அந்த சிறுகோள் பூமியை தாக்காமல் கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக 140 மீட்டர் விட்டம் கொண்ட எந்த ஒரு சிறு கோளும் பூமிக்கு மிக அருகில் வந்தால் அது அபாயகரமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை பூமிக்கு அருகில் பெரிய கோள் வந்ததில்லை என்றும் தற்போது சிறு கோள் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தகவல் தெரிவித்திருந்தது.
Also Read : 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இந்த கோள் பூமியை தாக்கவும் செய்யலாம் தாக்காமலும் நகர்ந்து போகலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தியர்ந்த நிலையில் தற்போது இந்த கோள் பூமியை கடந்து சென்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது என்றும் சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் விஞ்ஞானிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்த இந்த சிறுகோள் எந்த வித சேதாரத்தையும் ஏற்படுத்தமால் அமைதியாக பூமியை கடந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.