பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது ஃபர்னாஸ் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் படகு பயணம் செய்வது வழக்கம்.
இந்த ஏரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்றில் நேற்று பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதிர்பாராத விதமாக அங்கிருந்த குன்று ஒன்றின் ஒரு பகுதியாக இருந்த பெரிய பாறை ஒன்று திடீரென உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் 32 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.