விக்ரம் லேண்டர் :
இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி இன்றுடன் (23.08.24) வெள்ளிக்கிழமை ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
தேசிய விண்வெளி தினத்தின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று டெல்லியில் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில், பிரக்யான் ரோவர் நிலவில் தங்கியிருந்து 14 நாட்கள் ஆய்வு செய்த விவரங்களை வெளியிட இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
பெண் மருத்துவர் பாலியல் படுகொலை : நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் :
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையும், மகளிர் பாசறையும் இணைந்து இன்று பகல் 2 மணிக்கு, சென்னை எழும்பூர், இராஜரத்தினம் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
த.வெ.க.கொடி தொடர்பாக புகார் :
ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார். இது தொடர்பான மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :
கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி – உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி சந்திப்பு :
பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.
வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டு : டெல்லி போலீஸ் மறுப்பு
டெல்லியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூற உள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது என்ற வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈட்டி எறிதல் : வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம்
2024 டைமண்ட் லீக் தொடரில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து மாபெரும் சாதனை..
August 22 Gold Rate : தங்கம் விலை:
இன்று (23.08.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660க்கும், சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.