ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் முடிவெடுத்துள்ளது.
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை விடுத்து, மைதானங்களிலும், நீச்சல் குளங்களிலும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பனேஸ், இந்தாண்டிலேயே இத்தடை அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது .
ஆஸ்திரேலியா அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஒரு பக்கம் ஆதரவு பெருகினாலும் மறுபக்கம் கண்டனங்களும் வலுத்து வருகிறது.