ஆஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் டால்பின்களுடன் நீந்துவதற்காக ஆற்றில் குதித்த போது, சுறா (shark) தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில், டால்பின்களுடன் நீந்துவதற்காக ஆற்றில் குதித்த இளம்பெண்ணை இனம் தெரியாத சுறா (shark) ஒன்று தாக்கியது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் புறநகர் பகுதியான வடக்கு ஃப்ரீமண்டில் பகுதியில், டால்பின்களுடன் நீந்துவதற்காக ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி சுறாவால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து, ஃப்ரீமண்டில் மாவட்ட காவல்துறை அதிகாரி பால் ராபின்சன் கூறுகையில், சிறுமி டால்பின்களுக்கு அருகில் நீந்துவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது, நீரின் மேற்பரப்பில் இருந்து சிறுமியை கீழே இழுத்த அறியப்படாத சுறா இனத்தால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த பெண்ணை சுறாவிடம் இருந்து மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அந்த இளம்பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை “மிகவும், அதிர்ச்சிகரமானது” என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரான பால் ராபின்சன் கூறியுள்ளார். மேலும், “இது மிகவும் ஆபத்தானது, என்றும் கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு ஃப்ரீமண்டலில் உள்ள ஸ்வான் நதியில் இருக்கும் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசு எச்சரித்தது.
மேலும் கடற்கரை மூடல்களை கடைபிடிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.
இந்தச் செய்தியால் சிறுமியின் குடும்பம் நிலைகுலைந்து போனதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அப்பகுதியில் நடந்த முதல் கொடிய சுறா தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. மீன்வள நிபுணர்களின் கூற்றுப்படி, ஆற்றின் அந்தப் பகுதியில் சுறாக்கள் இருப்பது வழக்கத்திற்கு மாறானது.
டரோங்கா கன்சர்வேஷன் சொசைட்டி வெளியிட்ட அறிக்கையின்படி, 1960 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஆற்றில் கடைசியாக பயங்கரமான தாக்குதல் நடந்தது. சிட்னியின் ரோஸ்வில்லி பாலத்தில் 11 அடி உயரமுள்ள காளை சுறா ஒரு ஸ்நோர்கெலரை கடித்தபோதுதான் அது நடந்தது எனவும் தெரிவித்துள்ளார்.