உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் (Ayodhya ram temple) கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாளான இன்று நடைபெற்றது.
மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை இன்று செய்யப்பட்டது.
பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். அப்போது ராம பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வீடியோ
அவரைத் தொடர்ந்து, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.
ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ராணுவ ஹெலிகாப்டர்கள் பூமழை தூவின.
பின்னர் அயோத்தி ராமர் கோவில் கருவறை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : New York: பிரபல டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிரும் ராமர்
இந்த கும்பாபிஷேக விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி உள்ளனர்.
இந்த விழாவில் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கவுதம் அதானி, சச்சின், விராட் கோலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மோகன் லால், தனுஷ், ரன்பிர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மேலும் இந்த பிரம்மாண்ட விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8000 விஐபிக்கள் கலந்து கொண்டனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழும் இந்துக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் (Ayodhya ram temple) வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலித்து திருவிழா கோலம் பூண்டுள்ளது.