டெஸ்லா எலக்ட்ரிக் கார் தானியக்கி பைலட்டில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 9 ஆம் தேதி பிலடெல்பியாவில் நடந்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்த செய்தி வைரலாகியுள்ளது.
பிறந்த குழந்தை, உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது.
33 வயதான யிரான் ஷெர்ரி மற்றும் அவரது கணவர் கீட்டிங் ஷெர்ரி, ஆகியோர் தங்கள் மூன்று வயது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் போக்குவரத்தில் சிக்கியபோது செல்வி ஷெர்ரியின் தண்ணீர்குடம் உடைந்தது. போக்குவரத்து நகராததாலும், சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போகலாம் என்பதை தம்பதியினர் உணர்ந்த நிலையில்,
கீட்டிங் ஷெர்ரி தன்னியக்க பைலட் பயன்முறையை இயக்கி, மருத்துவமனைக்கு செல்லும் வகையில் கார் செல்லும் மேப்(map) செட்டிங்கை அமைத்தார்.
பின்னர் அவர் தனது மனைவியை கவனிக்க ஆரம்பித்தார்.
“அவள் என் கையை நொறுக்கப் போகிறாள் என்று நான் நினைக்கும் அளவுக்கு அவள் என் கையை அழுத்திக்கொண்டிருந்தாள். நான் “இரன், சரி, உன் சுவாசத்தில் கவனம் செலுத்து” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அது எனக்கும் அறிவுரையாக இருந்தது.
மருத்துவமனைக்குச் செல்லும் 20 நிமிட பயணமானது வேதனையளிக்கிறது என்றும் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தைச் சரிபார்க்க GPSஐப் பார்த்துக் கொண்டே இருந்ததாகவும் திருமதி ஷெர்ரி கூறினார்.
கார் மருத்துவமனைக்கு வந்தவுடன் மேவ் என்ற குழந்தை பிறந்தது. செவிலியர்கள் காரின் முன் இருக்கையில் தொப்புள் கொடியை அறுத்தனர்.
அமெரிக்காவில் நடந்த இந்த வினோத சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.