ராஜஸ்தானில் 26 விரல்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பரத்பூரில் 26 விரல்களுடன் பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து, குழந்தையின் குடும்பத்தினர் 26 விரல்களுடன் பிறந்த குழந்தையை “தெய்வ அவதாரம்” என்று கருதி மகிழ்ச்சியில் உள்ளனர்.
அந்த குழந்தைக்கு ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள் என மொத்தம் 14 விரல்களும், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் என 12 விரல்களும் சேர்த்து 26 விரல்களுடன் அக்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்,அந்த குழந்தை தோலகர் தேவியின் அவதாரம் என குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால், இது ஒரு மரபணு குறைபாடு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக 26 விரல்கள் இருப்பது இயல்பானது என்றாலும், இந்த நிலை மிகவும் அரிதானது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சர்ஜு தேவி என்ற 25 வயது பெண்ணுக்கு தான் இந்த குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் எங்கள் வீட்டுக்கு லட்சுமி தேவி வந்துவிட்டார் என்று குழந்தையின் மாமா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர் “ இந்த குழந்தையை எங்கள் குடும்பத்தினர் தோலகர் தேவியின் அவதாரமாக கருதுகிறோம். என் சகோதரிக்கு தான் 26 விரல்கள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்” என்று தெரிவித்தார்.