சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கைதியால் சரமாரியாக குத்தினார் .
கத்தி குத்தில் பலத்தகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார் .
இந்த நிலையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய விக்னேஷை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஜாமின் கோரி விக்னேஷ் நீதிமன்றத்தை நாடிய நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது மருத்துவர் பாலாஜியை தாக்கியதாக இளைஞர் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம், நோயாளிக்கு சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்காமல் போலீசார் மவுனமாக இருந்ததால் இளைஞர் விக்னேஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்திட வேண்டும் எனும் நிபந்தனையுடன் இளைஞருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.