திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுபணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.என். அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு..
கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 20 முதல் 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை செய்துதர உத்தரவிடப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு விஐபி பாஸ் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பணியாளர்களுக்கு தான் அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பரணி தீபத்துக்கு 4 ஆயிரம் பேர், மகா தீபத்துக்கு 7 ஆயிரம் முதல் 7,500 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக அனுமதிக்க சாத்தியக்கூறு இருந்தால், ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.