விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் அகிலன், அக்ஷயா என்பவரை காதல் திருமண செய்துகொண்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபல சீரியல்களில் “ரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பானது.
இந்த சீரியலில் நடித்து பிரபலமான அகிலன் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். விஷாலின் வீரமே வாகை சூடும், மாடர்ன் லவ் சென்னை போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அகிலனுக்கு அக்ஷயா என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அக்ஷயா என்பவரை காதலித்து வந்த அகிலன், குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அகிலன் – அக்ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் மட்டும் இன்றி, அவர்களது நண்பர்கள் உறவினர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறனர்.