Bhopal IISER Summer Internship 2024 : கோடைகால விடுமுறையை கழிக்க, கோடைகால வேலை அல்லது இன்டர்ன்ஷிப் இதில் எது சிறந்தது என்பது பல மாணவர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி?
இன்டர்ன்ஷிப் மற்றும் கோடைகால வேலைகள் இரண்டுமே படித்து கொண்டிருக்கும் தங்களின் திறமையை அதிகரிக்க உதவும் வழித்தடங்களாகும்.
மேலும், இவை இரண்டும் உங்கள் ரேஸுமேக்கு (resume) சாத்தியமான கூடுதல் மதிப்பை பெற்று தரும்.
2024 ஆம் ஆண்டிற்கான கோடைகால இன்டெர்ன்ஷிப் அறிவிப்பை சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : கள்ளழகர் விழாவில் தண்ணீர் பீய்ச்சியடிக்க கூடாது – ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்கு தடை!
போபாலில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எடுகேஷன் அண்ட் ரிசெர்ச் (Indian Institute of Science Education and Research) கல்வி நிறுவனமும், தங்களின் கோடைகால இன்டர்ன்ஷிப் 2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IISER-ன் 2024க்கான கோடைகால இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு, அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல் மற்றும் பொருளாதார அறிவியல், கலை மற்றும் சமூக அறிவியல் போன்ற சப்ஜெக்ட்களில் ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், போபால் ஐ.எஸ்.இ.ஆர். கல்வி நிறுவன ஆசிரியர்களுடன் சேர்த்து அவர்களது ஆராய்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
மே 27 தொடங்கி ஜூலை 20 வரை நடைபெறவிருக்கும் இந்த கோடைகால இன்டர்ன்ஷிப்பில்m பி.எஸ்சி., பி.டெக்., பி.இ., முடித்தவர்கள் அல்லது 2வது, 3வது, 4வது ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லது முதலாமாண்டு எம்.எஸ்சி., எம்.டெக்., சேர்க்கை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோடைகால இன்டர்ன்ஷிப் 2024க்கான திட்டங்களில், அதிகபட்சம் மூன்று திட்டங்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆராய்ச்சி பணிகள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை (www.iiserb.ac.in) அணுகலாம்.
மேலும் இன்டர்ன்ஷிப் முடித்து விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் Bhopal IISER Summer Internship 2024.
https://internship.iiserb.ac.in/internship/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21.
இதையும் படிங்க : ஜிபேயில் வாக்காளர்களுக்கு பணம்-DMKபுகார்!