கேமராக்கள் இருப்பதை கூட மறந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் முத்தமிட்டு கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பிக்பாஸ் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசனை பார்க்க மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. பெரும்பாலான போட்டியாளர்கள் மக்களுக்கு அதிகம் தெரியாமல் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பொதுவாக பிக்பாஸ் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும் உருவாகி வருகிறது. பொதுவாக ஆணும், பெண்ணும் சகஜமாக பழகி வருவது, காதலிப்பது கலாச்சார சீர்கேடு என ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர்.
தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மீஷா ஐயர் மற்றும் இஷான் கேசல் ஆகிய போட்டியாளர்கள் மிக நெருக்கமாக பழகி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான ப்ரமோவில் இருவரும் கேமராக்கள் இருப்பதைக் கூட மறந்து ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்கின்றனர். இந்த ப்ரமோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரொமோ வீடியோ:
https://www.youtube.com/watch?v=eLHDbBJvWpU